ஈரோட்டில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோட்டில் மகள் திருமணத்துக்கு பணம் திரட்ட முடியாததால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-05-11 03:10 GMT

ஈரோட்டில் மகள் திருமணத்துக்கு பணம் திரட்ட முடியாததால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் பாபு (வயது 44). பெயிண்டரான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், இவர் தெரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

இது தவிர மகளின் திருமணத்துக்கு தேவையான பணத்தை தன்னால் திரட்ட முடியவில்லை என்று உறவினர்களிடம் கூறி புலம்பி வந்துள்ளார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர், மின்விசிறி கொக்கியில் துண்டால் தூக்கிட்டு கொண்டார். அப்போது, அங்கு வந்த உறவினர்கள், பாபு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாபு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News