ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் தகவல் பகுப்பாய்வுத் துறை ஒரு நாள் கருத்தரங்கம்

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் பகுப்பாய்வுத் துறையின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-12-31 06:00 GMT

கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த ஒருநாள் கருத்தரங்கில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் பகுப்பாய்வுத் துறையின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இளநிலை கணினி அறிவியல் மற்றும் தகவல் பகுப்பாய்வுத் துறையின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், இளநிலை கணினி அறிவியல் துறையின் தலைவர் பி.ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தாளாளர் பொ.தே.தங்கவேல் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.


இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.பெர்னார்ட் ஆரோக்கியம் மேம்பட்ட தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்தும் தொழில்நுட்பங்களை நாம் கையாளும் விதம் மற்றும் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பங்களின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததோடு தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மாணவர்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்களும் தகவல் பகுப்பாய்வுத் துறையை சார்ந்த மாணவர்களும் என 400 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இக்கருத்தரங்கின், இறுதியாக இளநிலை கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் எம்.எஸ். கோகிலா நன்றியுரை ஆற்றினார். மேலும், இதில் இளநிலை கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News