பவானியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவர், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2025-04-01 12:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்.

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவர், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்தன். அவருடைய மகன் சம்பத்குமார் என்கிற குமார் (வயது 38). இவரை, மோட்டார்சைக்கிள் திருட்டு சம்பந்தமாக கடந்த 27ம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் பவானி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது பவானி கிளை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பத்குமார் பவானி அருகே சின்னமோளபாளையம் பகுதியில் வாட கைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததாகவும், அந்த வீட்டில் கிருஷ்ணர், ராதை சிலை களை பதுக்கி வைத்ததாகவும் பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் வீட்டில் கிருஷ்ணர், ராதை சிலைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 15 கிலோ எடையுள்ள அந்த சிலைகள் ஒவ்வொன்றும் 2½ அடி உயரத்தில் இருந்தன.

இதைத்தொடர்ந்து, அவைகள் கோவிலில் இருந்து திருடப்பட்டதா? என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளி தற்போது பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் மூலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News