ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

இட பிரச்சினைக்கு தீர்வு கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-12-09 11:30 GMT
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் அழைத்துச் சென்ற போது எடுத்த படம்.

  • whatsapp icon

இட பிரச்சினைக்கு தீர்வு கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னப்புலியூர் குண்டுசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 69). இவர் தனக்கு சொந்தமான இட பிரச்சினை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்து வந்து உள்ளார். மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பெட்ரோலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News