ஈரோடு: பகுதி நேர வேலை எனக்கூறி பெண்ணிடம் ரூ.5.29 லட்சம் பறித்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவர் கைது
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த பெண்ணிடம் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.5.29 லட்சம் பறித்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோபியைச் சேர்ந்த பெண்ணிடம் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.5.29 லட்சம் பறித்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தண்ணீர்பந்தல் புதூரைச் சேர்ந்தவர் சுபத்ரா (வயது 32). பட்டதாரியான இவர் சமூக வலைத்தளத்தில் ஆன்லைனில் பகுதி நேர வேலை கிடைத்து செய்தார். முதலில் ஊதியமாக ரூ.9,888 வழங்கப்பட்டது.
மீண்டும் பணி தேவை எனில் ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய சுபத்ரா, சமூக வலைதளத்தில் வந்த தகவல்படி கேரளாவைச் சேர்ந்த பாத்திமா பீவி என்ற பெண்ணின் வங்கி கணக்குக்கு கேட்ட தொகையை அனுப்பினார்.
ஆனால், அதன் பின்னர் பகுதி நேர வேலை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த சுபத்ரா இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் பாத்திமா பீவியை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பதுங்கி இருந்த உபைத்தை (41) ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஈரோடு அழைத்து வந்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்