பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
பவானி அருகே உள்ள பூதப்பாண்டி பகுதியில் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பூதப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் சண்முகம் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.