அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2025-05-02 13:10 GMT

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம் தும்கூரு பகுதியில் இருந்து தேங்காய் நார் பாரம் ஏற்றிய லாரி கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று காலை புறப்பட்டது. லாரியை அதே பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 50) என்பவர் ஓட்டினார். கிளீனராக குமார் (30) என்பவர் இருந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ஹரிதாஸ் லேசான காயம் அடைந்தார். கிளீனர் குமார் காயமின்றி உயிர் தப்பினார்.

உடனே காயம் அடைந்த டிரைவர் ஹரிதாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பர்கூர் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News