அந்தியூர் அருகே சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அருகே சோளம் ஏற்றி வந்த லாரி, சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.;

Update: 2022-09-04 10:09 GMT

அந்தியூர் அருகே விபத்துக்குள்ளான லாரி.

கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சோளம் ஏற்றி கொண்டு இன்று காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி அந்தியூர் அருகே உள்ள வரப்பள்ளம் வி பாய்ன்ட் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த, சோள மூட்டைகள் கீழே சரிந்தன. இதையடுத்து சரிந்த சோள மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News