சத்தியமங்கலம் : பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் சீறிப்பாய்ந்த சிறுத்தை; நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையை கடந்து சிறுத்தை சீறிப்பாய்ந்து சென்றது. இதை, நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.;
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையை கடந்து சிறுத்தை சீறிப்பாய்ந்து சென்றது. இதை, நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நேற்று சிறுத்தை ஒன்று சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் பாய்ந்தபடி சீறிப்பாய்ந்து கடந்து சென்றது.
இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்துடன், வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தையை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
தற்போது, இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பண்ணாரி வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.