சத்தியமங்கலம்: தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியானது.;
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தையொட்டிய பகுதியில் நேற்று முன்தினம் சாலையோரத்தில் கன்றுக்குட்டி ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது.
இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த கன்றுக்குட்டியை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது கன்றுக்குட்டியின் கழுத்தில் ஏதோ விலங்கின் பற்கள் பதிந்த அடையாளம் இருந்தது. அதை வைத்து வனத்துறையினர் ஆய்வு செய்ததுடன், அந்த பகுதியில் தரையில் பதிந்திருத்த கால் தடங்களையும் பார்வையிட்டனர்.
அதில் கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்றதையும், மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் அது பலியானதையும் வனத்துறையினர் உறுதி செய்தனர். மேலும், சிறுத்தை கடித்து கொன்ற கன்றுக்குட்டி யாருடையது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.