ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று (மார்ச் 11ம் தேதி) நடைபெற்றது.;

Update: 2025-03-11 20:30 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று (மார்ச் 11ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் சார்பில் சத்தியமங்கலம் மற்றும் அந்தியூர் வருவாய் வட்டத்தில் சாலைவசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சாலைவசதி ஏற்படுத்துதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் வனச்சாலைக்கு பதிலாக வனத்துறைக்கு வழங்கப்படவுள்ள மாற்றுநிலம் ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் நிலுவையில் உள்ள தடையின்மைச் சான்றியினை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக அனுப்பிட அறிவுறுத்தினார். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தையும் வரி கேட்பு பட்டியலில் முன்னேற்றம் ஆய்வு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் இணைப்பு, மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தும் பணியினை துரிதப்படுத்தி விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, பள்ளிகல்வித்துறையின் சார்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு செய்தல், உறுதிபடுத்துதல் தொடர்பாக துறை அலுவலருடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்தும் துறை வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் பிரிவு) சுதாகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), கா.செல்வராஜ் (வளர்ச்சி), உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News