அந்தியூர் அருகே பர்கூரில் கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை இன்று (நவ.20) காலை பிறந்தது.

Update: 2024-11-20 05:00 GMT

பர்கூர் தாமரைக்கரை பகுதியில் ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புணர் அங்கமுத்து, டிரைவர் சதீஷ்குமார்.

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை இன்று (நவ.20) காலை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராமம் தாளக்கரையைச் சேர்ந்தவர் நாகராஜ், இவரது மனைவி சின்னத்தாய் (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இன்று (நவ.20) காலை பிரசவ வலி ஏற்பட்டது. 

இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அங்கிருந்து சின்னத்தாயை மீட்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்றனர்.

 ஆம்புலன்சை சதீஸ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் அங்கமுத்து இருந்தார். ஆம்புலன்ஸ், பர்கூர் அருகே உள்ள தாமரைக்கரை பகுதியை கடந்து சென்றபோது சின்னதாய்க்கு பிரசவ வலி அதிகமாகி உள்ளது.

அப்போது, அவசர கால மருத்துவ நுட்புணர் அங்கமுத்து, ஆம்புலன்சிலேயே சின்னதாய்க்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில், காலை 9.09 மணிக்கு சின்னதாய்க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், குழந்தையையும் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

108 ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாய், குழந்தையை காப்பாற்றிய அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் டிரைவருக்கு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் பாராட்டு தெரிவித்தார்.

ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now

Tags:    

Similar News