அந்தியூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அந்தியூரில் இன்று மாலை அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-05-10 15:08 GMT
அந்தியூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • whatsapp icon

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது சாத்தியமில்லை என சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.இதனை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அந்தியூர் வட்ட தலைவர் குருமூர்த்தி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டன.

இதேபோல், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர் கார்த்திகேயன் தலைமையில், செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் நடைபெற்றது.

Tags:    

Similar News