அந்தியூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து விபத்து: ரூ.60 ஆயிரம் பணம், பொருட்கள் எரிந்து சேதம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.60 ஆயிரம் பணம், பொருட்கள் எரிந்து சேதமாகின.;

Update: 2025-01-16 11:00 GMT

குடிசை வீடு தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.

அந்தியூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.60 ஆயிரம் பணம், பொருட்கள் எரிந்து சேதமாகின.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் கூத்தாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி மகன் சரவணன். இவர், ஓலையில் குடிசை வீடு அமைத்து அதற்கு மேல் தகரச் சீட்டுகளை போட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று (ஜன.15ம் தேதி) இரவு 9.40 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சரவணன் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும், வீட்டில் வைத்திருந்த 60 ஆயிரம் பணம், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.

தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களும், அந்தியூர் போலீசாரும் நடத்திய விசாரணையில் வீட்டில் ஏற்றிய விளக்கில் ஏற்பட்ட தீப்பொறி ஓலையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News