அந்தியூர் அருகே கொசு மருந்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோழிகளுடன் செல்ல தாய் அனுமதிக்காததால் கொசு மருந்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-04-24 08:20 GMT

அந்தியூர் அருகே தோழிகளுடன் செல்ல தாய் அனுமதிக்காததால் கொசு மருந்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். அவருடைய மனைவி பழனிதங்கம். இவர்களுக்கு பிரதீபா (வயது 19) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். பழனிதங்கம் கூலி வேலை செய்து மகன் மற்றும் மகளை படிக்க வைத்து வருகிறார்.

இதில் பிரதீபா சங்ககிரியில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் பி-பார்ம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பழனிதங்கத்தின் அக்காள் வீடு செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ளது. இங்கு கடந்த 21ம் தேதி பிரதீபாவும், அவருடைய சகோதரனும் சென்றனர்.

அன்றைய தினம் மாலை 5.30 மணி அளவில் பிரதீபா செல்போனில் தாய் பழனிதங்கத்தை தொடர்பு கொண்டு சித்தோடு அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்துக்கு தோழிகளுடன் செல்வதாக கூறினார். ஆனால், அதற்கு பழனிதங்கம் அனுமதி அளிக்கவில்லை. பிரதீபா கெஞ்சி கேட்டும் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

மேலும், எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் பழனிதங்கம் கண்டிப்புடன் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் மனமுடைந்த பிரதீபா வீட்டில் ஒரு அறைக்குள் சென்றார். பின்னர் சிறிதுநேரம் கழித்து, வீட் டில் இருந்த கொசு மருந்தை எடுத்து குடித்ததாக பெரியம்மாவிடம் கூறி உள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த அவர் உடனடியாக பிரதீபாவை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனி யார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். பின்னர் நேற்று முன்தினம் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரதீபா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News