ஆப்பக்கூடல் அருகே மளிகை கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்குப்பதிவு

ஆப்பக்கூடல் அருகே கூத்தம்பூண்டி ரைஸ்மில் பிரிவில் மளிகை கடையில் குட்கா விற்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-09-18 08:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த  ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ரைஸ்மில் பிரிவு பகுதியில் ஆப்பக்கூடல் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, கூத்தம்பூண்டி - வெள்ளாள பாளையம் சாலையில் உள்ள மளிகை கடையில் குட்கா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான தீபா (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 180 ரூபாய் மதிப்புள்ள 6 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News