ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் சிக்கி ரூ.3 லட்சம் லஞ்ச பணம்: 2 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு!

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது தொடர்பாக, 2 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.;

Update: 2025-04-13 01:30 GMT

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது தொடர்பாக, 2 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அலுவலகத்தில் செயற்பொறியாளர் சேகர் (வயது 52), களப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் மணி (வயது 48) ஆகியோரிடம் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சம் பணம் சிக்கியது. அரசின் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, சேகர், சுரேஷ் மணி ஆகிய 2 பேர் மீது ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களிடம் லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர் யார்? லஞ்சம் வாங்குவதற்கு வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News