ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,027 பேர் மீது வழக்கு
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,027 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
போக்குவரத்து விதிமீறல் வழக்கு (பைல் படம்).
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மாதத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 95 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கிய 12 பேர் மீதும், ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 558 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இருசக்கர வாகனத்தில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த 13 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற 13 பேர் மீதும், செல்போன் பேசிய படி வாகனம் ஓட்டிய 36 பேர் மீதும் என மொத்தம் 1,027 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.