ஆப்பக்கூடல் ஏரி அருகே பள்ளத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் ஏரி அருகே பள்ளத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2022-09-01 06:15 GMT

ஆப்பக்கூடல் ஏரி அருகே பள்ளத்தில் தலைக்குப்பற கவிழ்ந்த கார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணியிலிருந்து ஆப்பக்கூடல் நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கூத்தம்பூண்டிபிரிவு பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஏரி வளைவில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதைப் பார்த்த அவ்வழியாக சென்ற பொது மக்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஈரோட்டை சேர்ந்த தம்பதிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து இன்று காலை ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News