மொடக்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர் பலி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர் பலியானார்.;

Update: 2025-03-30 01:30 GMT

மூர்த்தி.

மொடக்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர் பலியானார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 49). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோடு-முத்தூர் மெயின் ரோட்டில் சின்னியம்பாளையம் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, சின்னியம்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே சென்ற போது, எதிரே விறகு லோடுடன் வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதினார்.

இந்த விபத்தில் கார், லாரியின் முன்பகுதி அப்பளம் நொறுங்கியது. இதில், மூர்த்தியும், லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் தாத்தையங்கார் கோட்டையை சேர்ந்த பெருமாள் என்பவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூர்த்தி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பெருமாள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News