பவானி: அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி!
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.;
பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டையை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் கோகுல கண்ணன் (10). இந்நிலையில் கடந்த 6ம் தேதி இரவு பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், செல்வத்தின் வீட்டில் மண்ணெண்ணை விளக்கு பற்ற வைக்கப் பட்டுள்ளது.
அப்போது, வீட்டின் திண்டு ஒன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கு, அருகே உறங்கிக் கொண்டிருந்த கோகுலகண்ணன் மீது விழுந்து அவனது சட்டையில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த செல்வம் மற்றும் அவரது உறவினர்கள், கோகுலகண்ணனை மீட்டு, பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோகுலகண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.