ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.72 சதவீதம் தேர்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.72 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11ஆயிரத்து 626 மாணவிகளும் என மொத்தம் 22,380 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 93 மாணவர்களும், 11 ஆயிரத்து 329 மாணவிகளும் என மொத்தம் 21ஆயிரத்து 422 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் மொத்த சதவீத தேர்ச்சி 95.72 சதவீதம் ஆகும். மாணவர்கள் 93.85 சதவீதமும் மாணவிகள் 97.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.