ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 924 பேருக்கு கொரோனா.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக இன்று 924 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Update: 2022-02-01 17:05 GMT

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வந்தது. ஈரோடு மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தொற்று பரவல் கடந்த 3 நாட்களாக சற்று தணிந்து வருகிறது.

நேற்று 5 ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,070 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்தநிலையில் இன்று ஒரே நாளில் 924 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 913 ஆக உயர்ந்தது.

இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேர் குணமடைந்து உள்ளனர்.இன்று  மட்டும் 993 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.

தற்போது 8 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். இதுவரை 725 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News