அந்தியூரில் 9 வாக்குச்சாடிகள் பதற்றமானவை- கூடுதல் பாதுகாப்பு
அந்தியூரில் 9 வாக்குச்சாடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்;
பைல் படம்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நாளை 19-ந் தேதி நடைபெற உள்ளது. அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 ஆயிரத்து 870 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட 9 வாக்குச்சாவடியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், வாக்குப்பதிவு எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு வெளியாட்கள் வராமல் இருக்க எல்லை கோடுகள் வரையும் பணி நேற்று நடைபெற்றது.