பவானிசாகர் அணையின் இரவு 8 மணி நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 9,700 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று (01.09.2022) இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 28-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.
அணைக்கு வினாடிக்கு 9,700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.