பவானி நகராட்சியில் 79.78 சதவீதம் வாக்குப்பதிவு
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 24 ஆயிரத்து 500 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் ஆண்கள் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 662 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 16 ஆயிரத்து 47 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இருவர் என மொத்தம் 30 ஆயிரத்து 711 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று நடந்து முடிந்த தேர்தலில், ஆண் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 828 பேரும், பெண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 672 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 500 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். பவானி நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 79.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.