அந்தியூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா

அந்தியூர் மைக்கேல்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-02-24 13:00 GMT

மைக்கேல்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டப்பட்ட போது எடுத்த படம்.

தமிழகமெங்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மைக்கேல்பாளையத்தில் அதிமுக சார்பாக இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், வடக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் தேவராஜ், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நாராயணன், சேர்மேன் தேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜா சம்பத் , அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணிசாமி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News