ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 72 பேர் கைது

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-01-21 11:00 GMT

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றித் திறனாளிகள்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தில் 70 பேருக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை ஆந்திரா மாநிலம் போன்று மாதம் 6 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாற்றுத் திறனாளிகள் துறையின் மூலமே அனைவருக்கும் வழங்க வேண்டும். மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 50 சதவீதம் நான்கு மணி நேரம் பணி என்ற பழைய நிலையை தொடர வேண்டும்.

8 மணி நேரம் பனித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும். மாற்று திறனாளிகள் அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முழக்கங்களை எழுப்பினர் .

இந்நிலையில், திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் 36 பெண் மாற்றுத்திறனாளிகள், 36 ஆண் மாற்றத்திறனாளிகள் என மொத்தம் 72 மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.

இதேபோல், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 100க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அந்தியூர் - பர்கூர் சாலையில் அமர்ந்து, மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை அந்தியூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பேருந்துகள் மூலமாக அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News