பவானி அருகே வாய்க்காலில் முழ்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு
பவானி அருகே உள்ள கோணவாய்க்காலில் தாயாருடன் துணி துவைக்க சென்ற 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.;
ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமிநகர் ஈபிகாலனி பகுதியை சேர்ந்தவர் செளந்தர்ராஜன். கூலித் தொழிலாளியான இவருக்கு 7 வயதில் நவீன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலின் கோணவாய்க்கால் என்ற பகுதியில் சிறுவன் நவீனை அவரது தாய் சித்ரா துணி துவைப்பதற்க்காக உடன் கூட்டி சென்றுள்ளார்.
இதையடுத்து வாய்க்கால் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நவீன் தீடிரென நீரில் மூழ்கியுள்ளான். இதை கவனிக்காத தாய் சித்ரா சிறிது நேரம் கழித்து மகன் நவீனை காணவில்லை என அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன் பின்னர் அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை மீனவர்கள் உதவியுடன் தேடினர்.
இதன் பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த சிறுவனின் உடலை மாயபுரம் பகுதியில் மீட்டு சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.