அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.74 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6.74 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 480 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 400 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதேபோல், மொந்தன் தார் ஒன்று 120 ரூபாய்க்கும், ரொப்பர் தார் 380 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 450 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 150 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 4,300 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆறு லட்சத்து 74 ஆயிரத்து 415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.