ஈரோடு மாவட்டத்தில் திருடு போன 69 செல்போன்கள் மீட்பு
ஈரோடு மாவட்டத்தில், திருடு போன 69 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.;
மீட்கப்பட்ட செல்போன், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், திருட்டு போன மற்றும் மாயமான செல்போன்களை மீட்பதற்கான நடவடிக்கையில், சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில், மாவட்டத்தில் திருடு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, பிரப் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது.
நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்து கொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை, சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். இதில் 69 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு 6 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். இந்த நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.