அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 64 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 64 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 7,000 தேங்காய்கள், குறைந்த விலையாக 4 ரூபாய் 79 பைசாவிற்கும், அதிக விலையாக 13 ரூபாய் 59 பைசாவிற்கும், நான்கு மூட்டை ஆமணக்கு கிலோ 70 ரூபாய் 17 பைசா விற்கும்,40 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 71 ரூபாய் 25 பைசா முதல் 87 ரூபாய் 89 பைசா வரையிலும், 35 மூட்டை அவரை கிலோ 60 ரூபாய் 06 பைசாவிற்கும், 15 மூட்டை கொள்ளு கிலோ 38 ரூபாய் 89 பைசாவிற்கும், 10 மூட்டை பாசிப்பயறு கிலோ 97 ரூபாய் 69 பைசாவிற்கும், 15 மூட்டை தட்டைபயிறு கிலோ 90 ரூபாய் 69 பைசாவிற்கும், 6 மூட்டை உளுந்து கிலோ 67 ரூபாய் 35 பைசா விற்கும், 9 மூட்டை நரிப்பயிறு கிலோ 94 ரூபாய் 06 பைசாவிற்கும் விற்பனையானது.
இன்றைய வர்த்தகத்தில் 64 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.