வார இறுதி நாட்கள்: ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.;

Update: 2025-02-28 00:40 GMT

சிறப்பு பேருந்துகள் இயக்கம் (பைல் படம்).

வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஈரோடு மண்டல பொது மேலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் வசதிக்காக ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், நாகர் கோவில், திருவண்ணாமலை, பழனி ஆகிய ஊர்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News