கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன 5 செல்போன் கோபுரங்கள் : வலைவீசி தேடும் போலீசார்

Crime News Tamil -வடிவேலுவின் கிணற்றை காணும் என்ற காமெடிபோல் செல்போன் டவரை காணவில்லை என தனியார் நிறுவன பொறியாளர் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-23 04:00 GMT

பைல் படம்

Crime News Tamil -சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோசலகுமார் (வயது 49). தனியார் நிறுவன பிராஜெக்ட் என்ஜினீயர். இந்த நிலையில் இந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை, தண்ணீர்பந்தல்புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி பிரிவு மற்றும் மொடச்சூர் ராஜன்நகர் ஆகிய 5 இடங்களில் ஏர்செல் செல்போன் நிறுவனம் அமைந்திருந்த செல்போன் கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை சுமார் ரூ.1.30 கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளது. இவை அனைத்தும் கடந்த 2017-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த நிலையில் அதன் பின்னர் இயங்கவில்லை.

இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் பிராஜெக்ட் என்ஜினீயர்  கோபி பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் இயங்காமல் போனது குறித்து ஆய்வு செய்தார். அப்போது 5 இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த டவர்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போன செல்போன் கோபுரங்களை கண்டு்பிடித்து தருமாறு கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 5 செல்போன் கோபுரங்களை தேடி வருகின்றனர்.

இது புதுசா..இருக்கே..!!??

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News