ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர் மீது 5 வழக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.;

Update: 2025-03-21 11:10 GMT

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சர் படம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர் மீது தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஈரோடு டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தப்படும் என பாஜகவினர் அறிவித்திருந்தனர். ஒரு சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Similar News