ஈரோடு மாவட்டத்தில் 48,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 15-வது கட்ட தடுப்பூசி முகாமில் 48,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-19 02:30 GMT

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 478 மையங்களில் 15- வது கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி முகாம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இதுதவிர நடமாடும் வாகனம் மூலம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டது.

மக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 500  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News