கிறிஸ்துமஸ் பண்டிகை: ஈரோட்டில் இருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Update: 2024-12-23 09:30 GMT

ஈரோட்டில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:- 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி, திருநெல்வேலி, நாகர்கோயில், தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News