ஈரோடு விசைத்தறி தொழிலாளர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு: ஏஐடியுசி வலியுத்தல்

சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ், 40 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-10-08 11:30 GMT

சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தியிடம்  விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ், 40 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. வலியுறுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி) சென்னிமலை வட்டார சிறப்பு பேரவை கூட்டம் சென்னிமலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் சின்னசாமி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னுசாமி, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் நாகப்பன், கட்டட தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி.மாவட்டக்குழு உறுப்பினர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் சென்னிமலை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது ஊதியம் மற்றும் போனஸ் கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழுவிற்கும். சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் கடந்த 23.10.2019 முதல் ஏற்பட்ட மூன்றாண்டு கால ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதால், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், அத்தியாவசிய வேண்டும். பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு. அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 2021-2022 ஆண்டுக்கான போனஸாக அவர்கள் ஈட்டிய சம்பளத்தில் 25 சதவீதம் வழங்க வேண்டும்.

அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வாக தற்போது பெற்று வரும் ஊதியத்தில் 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் தேசிய, பண்டிகை விடு முறை நாட்களுக்கு சட்டப்படி ஆண்டுக்கு 9 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக பிரீமியத் தொகையினை விசைத்தறி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே போனஸ் வழங்கவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 12ம் தேதி மதியம் விசைத்தறி களை நிறுத்திவிட்டு மாலை 4 மணிக்கு சென்னிமலையில் கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோடு சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், ஏ.ஐ.டி.யு.சி ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தியிடம் விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News