அந்தியூர் அருகே தனியார் மில் வேன் கவிழ்த்து விபத்து: டிரைவர் உள்பட 4 பேர் காயம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
Erode Live News, Erode Live Updates, Erode latest news, Erode News - அந்தியூர் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்பின்னிங் மில் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்று இன்று (டிச.1) காலை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த வேனை நாகேந்திரன் என்பவர் ஓட்டினார். வேனில், எண்ணமங்கலம், விராலிக்காட்டூர் கிராமங்களிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் குன்னத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், வெள்ளித்திருப்பூர் அருகே வந்தபோது, மழையினால், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் இருந்த டிரைவர் நாகேந்திரன் உள்பட 4 தொழிலாளர்கள் லேசான காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த தொழிலாளிகள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.