கோபிசெட்டிபாளையம் அருகே செந்நாய்கள் கடித்து 4 ஆடுகள், ஒரு சேவல் உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் செந்நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உட்பட ஒரு சேவல் உயிரிழந்தது.;
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த நஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் 4 ஆடுகள் மற்றும் ஒரு சேவல் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு ஆடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, 4 ஆடுகள் உட்பட சேவல் உயிரிழந்து கிடந்தது.
இதுகுறித்து, டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் நடத்திய விசாரணையில் வன விலங்குகள் ஆடுகளை தாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. செந்நாய்கள் தாக்கியதில் பலியாகி இருக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து பங்காளப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.