ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கோமதி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் கவிதா , மருத்துவத்துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.