ஈரோடு மாவட்டத்தில் நாளை 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

Vaccination Camp - ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,597 மையங்களில் நடக்கிறது.;

Update: 2022-08-20 00:45 GMT

Vaccination Camp -இது குறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில், 1,597 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை காலை, 7:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் உள்ள வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடக்கிறது. இதில், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரு தடுப்பூசியும் போட்டு உரிய நாட்கள் ஆனவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News