ஈரோடு மாவட்டத்தில் 10-ம் தேதி மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி 31-வது கட்டமாக மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாமானது 3,194 மையங்களில் நடைபெற உள்ளது.

Update: 2022-07-07 13:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  31-வது கட்டமாக மாபெரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஊட்டச்சத்து மையங்கள் என மொத்தம் 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இதில்  4,260 சுகாதார பணியாளர்கள் மற்றும் 71 வாகனங்கள் முகாமில் ஈடுபட உள்ளனர். எனவே முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News