கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளும் நாளை வேட்புமனு தாக்கல்
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிப்பு.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோபி நகராட்சி அலுவலகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, உதவி தேர்தல் அலுவலர்களாக நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், துப்புரவு அலுவலர் சோலராஜ், நகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோபி நகராட்சியில் உள்ள 1-வது வார்டு முதல் 10-வது வார்டு வரை நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், 11 முதல் 20 வரை துப்புரவு அலுவலர் சோலராஜ், 21 முதல் 30 வரை நகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ் ஆகியோரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.