பவானி அருகே புடவை வியாபாரி மர்ம சாவில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த பள்ளி மாணவன் உள்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே புடவை வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், நகைக்காக அவரை கொலை செய்த பள்ளி மாணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-12-29 02:45 GMT

கைது செய்யப்பட்ட இருவரையும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும் படத்தில் காணலாம்.

பவானி அருகே புடவை வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், நகைக்காக அவரை கொலை செய்த பள்ளி மாணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒலகடம் குலாலர் வீதியைச் சேர்ந்த டெல்லி செல்வராஜ் என்கிற செல்வராஜ் (வயது 70).த திருமணமாகாத இவர்  டெல்லியில் புடவை வியாபாரம் செய்து வருகிறார். மேலும், இவர் பாரதி ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் கடந்த 24ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், ஒலகடம் பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை சோதனை செய்தும் வந்தனர். 

இதனிடையே, பிரேத பரிசோதனைக்கு செல்வராஜ்-ன் உடல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் செல்வகுமார் கழுத்து பகுதியில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டும் கழுத்து நெறிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கழுத்து நசுக்கி கொலை செய்தது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து, சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாபேட்டை குருவரெட்டியூர் இலிப்பிலி கிராமம் மேட்டுப்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 24), இலிப்பிலி கிராமம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் திலீப் (வயது 20), மேலும், அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதனையடுத்து, போலீசார் வெள்ளித்திருப்பூர் புரவிபாளையம் பெரியகுருநாதசாமி கோவில் அருகே உள்ள பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள் மூன்று பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் பேரும் கூட்டாக சேர்ந்து கடந்த 23ம் தேதி என்று நள்ளிரவு செல்வராஜின் வீட்டில் மாடிப்படி வழியாக மேலே ஏறி வந்து கூரையை பிரித்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், அசோக் மற்றும் திலீப் ஆகிய இருவரும் துணியை வைத்து கழுத்தை நெறித்ததுடன் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துவிட்டு, செல்வராஜ் அணிந்திருந்த ஐந்து மோதிரங்கள், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், தங்கச் சங்கிலி என மொத்தம் 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவன் உள்பட அசோக் மற்றும் திலீப் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்ததுடன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News