அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 அடி நீள நாகப்பாம்பு மீட்பு
அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வட்டக்காட்டைச் சேர்ந்தவர் அன்னக்கொடி. இவரது வீட்டில் நாகப் பாம்பு இருந்ததை கண்டு, அந்தியூர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்தியூர் வனசரக அலுவலர் உத்தரசாமி உத்தரவுப்படி, செல்லம்பாளையம் மேற்கு பீட் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டில் மறைந்திருந்த நாகப் பாம்பை, உபகரணத்தின் உதவியால் வனப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து வேதபாலி வனப்பகுதிக்கு பாம்பை கொண்டு சென்ற வனப் பணியாளர்கள் பத்திரமாக விட்டுச் சென்றனர்.