கோபிச்செட்டிப்பாளையம்: லாரியில் ரேசன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே லாரியில் கடத்த முயன்ற ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.;
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் உள்ளது. இந்த குடோன் அருகே லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்றபோது, சரக்கு வேனில் இருந்து லாரியில் ரேசன் அரிசி மூட்டைகள் ஏற்றப்படுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் லாரி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட, பொள்ளாச்சியை சேர்ந்த நந்தகுமார், புளியம்பட்டியை சேர்ந்த குப்புசாமி, சத்தியமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபரான சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜன்பாபு என்கிற தாடிராஜா தப்பியோடியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தப்பியோடிய தாடி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் 12 டன் ரேசன் அரிசி, லாரி மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.