கவுந்தப்பாடி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

கவுந்தப்பாடி அருகே மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆட்டை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-30 06:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் சுலோச்சனா. இவர் அய்யன்வலவு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆடு ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றனர்.

இதனை கண்ட சுலோச்சனா சத்தமிடவே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் விரட்டி சென்றனர். இதனையடுத்து, ஆடு திருடிய கவுந்தப்பாடி அய்யன்காட்டை சேர்ந்த மாரிச்சாமி மகன் அருண்குமார், திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் ஆனந்த், பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை பிடித்து கவுந்தப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News