சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

பெரியூர் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-01 16:00 GMT

கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரியூர் கிராமம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலை ஒட்டி உள்ள காட்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக, சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் கீழ்பவானி வாய்க்காலை ஒட்டிய காட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம், விசாரணை செய்ததில் உக்கரம் பகுதியை சேர்ந்த தங்கவேல், அவரது மனைவி வசந்தி மற்றும் ஆறுமுகம் என தெரியவந்தது. பின்னர், 3 பேரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 150 லிட்டர் சாராய ஊறல் , 10 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News