ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்

ஈரோடு மாநகரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2021-11-07 08:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தீபாவளி பண்டிகை என்பதால் போலீசார் அபராதம் விதிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் மீண்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாநகர் பகுதியில் காளைமாடு சிலை,பன்னீர்செல்வம் பார்க், சவிதா பஸ் நிறுத்தம், மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மட்டும் போலீசார் ஆங்காங்கே பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர் களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறாக மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 250 வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.100 அபராதம் விதித்து ரூ.25 ஆயிரம் வசூலிக்க பட்டதாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, தலைக்கவசம் வாகன ஓட்டிகளின் உயிர்க்கவசம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்காக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேப்போல் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக மதிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலே விபத்துக்கள் தவிர்க்கப்படும். குறிப்பாக குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தவறு. வாகன ஓட்டிகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News